ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan
00:00 - அறிமுகம்
00:32 - திட்டமிட்டு அழிக்கப்பட்டதா?
03:15 - அழிக்க முடியாத கோவில்
05:23 - Stapler ( இணைக்கும் ) டெக்னாலஜி
09:26 - வினோதமான ஓட்டைகள்
10:59 - கல்லால் செய்யப்பட்ட ஆப்பு
12:43 - மர்மமான கட்டுமானம்
14:47 - இத யாரு கட்டுனாங்க?
16:19 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நாம ரொம்ப ரொம்ப பழமையான வீரநாராயண கோவில பத்தி தான் பாக்க போறோம். உண்மைய சொல்லப்போனா, இந்த கோவில் இந்நேரத்துக்கு இருந்துருக்காது. இது மொத்தமா அழிஞ்சு தரைமட்டமாக்கிருந்துருக்கணும். இந்த கோவில் பல நூறு வருஷமா ஏகப்பட்ட அழிவ பாத்துருக்கு. ஆனா கூட, இப்போ வரைக்கும் இந்த கோவில் கம்பீரமா நின்னுட்டு இருக்குன்னா, அதுக்கு பின்னாடி சில ரகசியம் ஒளிஞ்சுட்டு இருக்கு. இந்த கோவில யாரும் (படையெடுத்து வந்தவங்க) attack பண்ணலன்னு சில experts -லாம் சொல்றாங்க, ஆனா அவங்க சொல்றது தப்பு. இந்த சிற்பங்களோட முகத்த கொஞ்சம் பாருங்க, ஒன்ன கூட விட்டு வைக்காம, எல்லா சிற்பத்தோட முகத்தையும் சிதைச்சுருக்காங்க.
எல்லா சிற்பத்தையுமே ரொம்ப கவனமா திட்டம் போட்டு சிதைச்சுருக்காங்கன்னு இத பாக்குறப்பவே உங்களுக்கு புரியும். படையெடுத்து வந்தவங்க தான் இதெல்லாத்தையும் சிதைச்சுருக்காங்க அப்படின்றதுக்கு இது ஒரு நல்ல உதாரணம். ஏன்னா அவங்க சிலைய கும்பிடுறத (உருவ வழிபாட) தப்புன்னு நினைச்சாங்க. முகத்த செதுக்குறது மட்டும் தப்புனு அவங்க நினைக்கல, செதுக்குன முகத்துல கண்ண வைக்கிறது கூட கெட்டதுன்னு தான் அவங்க நினைச்சாங்க. இதனால தான் எல்லா முகத்தையும் ரொம்ப கவனமா துடைச்சு வச்ச மாறி சிதைச்சுருக்காங்க.
இந்த அரிப்பு (erosion), இயற்கையா நடந்துருந்தா, அது இப்படி முகத்த மட்டுமா குறி வச்சு அழிக்கும் (சிதைக்கும்)? இயற்கையா நடந்துருந்தா, முகத்துல மட்டும் இல்லாம, சிற்பங்களோட எல்லா இடத்துலயும் ஒரே மாறி தான சிதைஞ்சுருந்துருக்கும். சிதைஞ்சு போனதுக்கு ஒரு நல்ல உதாரணம், இங்க இருக்கற இந்த அழகனா பொண்ணு தான். அவங்களோட மூக்க complete -ஆ வெட்டிட்டாங்க. அவங்களோட உதட்ட சிதைச்சுட்டாங்க, அவங்களோட கண்ண மொத்தமா remove பண்ணிட்டாங்க. Acid ஊத்தி பொண்ணோட முகத்த சிதைச்சுட்டாங்கன்னு, இன்னைக்கு கூட நாம சில நேரம் news-ல பாத்துருப்போம். சில நேரத்துல வேணும்னே பொண்ணுங்கள அசிங்கப்படுத்துறதுக்காகவே இந்த மாறி சில பேர் (சில கேவலமான ஜென்மங்க) பண்ணுவானுக. இந்த மாறி attacks -க்கு எல்லாம் பழங்காலத்து முன்னோடி, நாம இப்போ பாத்துட்டு இருக்கறது தான். இந்த சிலை மனுஷன மாறி இல்லாம, ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு அந்த வெறுப்போட சாட்சியா இருக்கும்.
ஆனா இங்க படையெடுத்து வந்தவங்க இந்த கோவில சும்மா casual-ஆ அழிச்சுட்டு போகல, அவங்க பிளான் பண்ணி, தெளிவா தான் இத பண்ணிருந்துருக்காங்க. கோபுரத்துக்கு மேல பாருங்க. இது ரொம்பவே shocking-ஆ இருக்கு, யாரு இதெல்லாம் சிதச்சாங்களோ, அவங்க ரொம்ப dedication-ஓட இத பண்ணிருந்துருக்காங்க. அவங்க மெனக்கெட்டு இந்த கோபுரத்துக்கு மேல ஏறி, அந்த சிலையெல்லாம் சிதைச்சுருக்காங்க, So கண்டிப்பா திட்டம் போட்டு தான் அவங்க இதெல்லாம் பண்ணிருந்துருக்காங்க. அவங்க ஏணிய போட்டு மேல ஏறி, கோடாரிய வச்சு இந்த சிலையெல்லாம் அழிச்சுருக்காங்கன்னு இப்போ உங்களால தெளிவா புரிஞ்சுக்க முடியும். இங்க படையெடுத்து வந்தவங்க கிட்டத்தட்ட எல்லா சிலைலயும் கை வச்சுட்டு போய்ட்டாங்க. ஆனாலும், அதுக்கப்பறமும் கூட இந்த கோவிலோட architecture-அ அவங்களால அழிக்க முடியல.
இப்படி ஒன்னு ஒண்ணா எல்லா சிற்பத்தோட முகத்தையும் சிதைக்குறதுக்கு பதிலா, கோவில்ல இருக்கற கல் blocks-அ எல்லாம் remove பண்ணி மொத்தமாவே அவங்க இந்த கோவில அழிச்சுருக்கலாமே? அவங்க ஏன் அப்படி பண்ணலன்னு யோசிச்சு பாத்தீங்களா? அவங்களால இதெல்லாம் தொட முடிஞ்சுதே தவிர, இங்க இருக்கற ஒரு கல் block-அ கூட அவங்களால அழிக்க (கழட்ட) முடியல. ஏன்? அழிச்சே ஆகணும் அப்படின்ற குறிக்கோளோட இருக்கறவங்க, ஒரு advanced-ஆன அசைக்க கூட முடியாத ஒரு பொருள பாக்குறப்ப என்ன நடக்கும்? இதுதான் அந்த கேள்விக்கான பதில் (result).
அசைக்கவே முடியாத megalithic structures-அ, அதாவது வரலாற்றுக்கு முந்துன காலத்து structures-அ உருவாக்குறதுக்கான சாவி (key) இந்த வீரநாராயண கோவில்ல இருக்கு. காலத்தால அழிக்க முடியாத structures-அ கட்டணும்ன்னு இப்போ இருக்குற engineers நினைச்சாங்கன்னா, அவங்க கண்டிப்பா இந்த கோவிலுக்கு வரணும். பழங்காலத்து ஸ்தபதிங்க இந்த கோவில்ல எப்படி stone blocks-அ assemble பண்ணிருக்காங்கன்னு அவங்க இத பாத்து கத்துக்கணும்.
அவ்ளோ ஏன், இன்னைக்கு கூட இந்த கோவில்ல இருந்து ஒரு கல் block- அ கூட நம்மளால remove பண்ண முடியாது. ஏன்னா, ஒவ்வொரு stone (கல்) block-ம், மத்த stone blocks கூட, நெறய விதமான கட்டுகளால (binding -னால) connect ஆகிருக்கு. கீழ இருக்கற ஒரு கல் block-அ நீங்க கழட்டி எடுக்கணும்னா, மேல ஆரம்பிச்சு மொத்த கோவிலயும் நீங்க கழட்டணும். இத பண்றதுக்கு வருஷக்கணக்காகலாம். மொதல்ல நீங்க மேல இருக்கற screw-அ கழட்டி எடுக்கணும், அதுக்கப்பறம் தான் மத்த எல்லாத்தயும் அழிக்க ஆரம்பிக்கணும். Of course, construction கீழ ground level -ல இருந்து தான் start ஆகிருக்கு. இந்த blocks -லாம் எப்படி connect ஆகிருக்குன்னு மொதல்ல நாம பாக்கலாம். இந்த stone blocks -அ எல்லாம் connect பண்றதுக்கு அவங்க, ரகசியமான டெக்னாலஜிய use பண்ணிருந்துருக்காங்க. உங்களுக்கு இங்க ஏதாவது தெரியுதா? இல்லல?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil