என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாக காண்கிறீர்களா? மாறுபட்ட கருத்துகளும் ஆலோசனைகளும் நிறைந்த உலகில், எதைப் பின்பற்றுவது என்று நீங்கள் எப்படித் தெரிந்து கொள்வீர்கள்? பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவன் தன்னுடைய ஞானத்தை உங்கள் இதயத்தில் எவ்வாறு வைப்பார் என்பதைக் காணும்போது நிம்மதியையும் உறுதியையும் பெறுங்கள். இயற்கையான பகுத்தறிவு அல்லது சிந்தனையை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, உங்கள் இதயத்தில் அவருடைய வழிகாட்டுதலையும் அறிவுறுத்தலையும் எவ்வாறு உணர முடியும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்களையும் திருப்பங்களையும் காணத் தொடங்குவீர்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மே 15, 2022 அன்று பிரசங்கித்த தேவ ஞானத்தை உன் இருதயத்தில் உணர்ந்திடு என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
00:00 அறிமுகம்: இயேசுவை பின்பற்றுங்கள் உங்களுக்கு குறைவுகள் வராது நீங்கள் ஏமாற மாட்டீர்கள்
08:51 நாம் ஏன் தேவனுடைய ஞானத்தை கேட்க வேண்டும்
19:40 தேவன் சொல்வதைக் கேட்க அவர் உங்களுக்கு ஒரு புது இதயத்தை தந்திருக்கிறார்
26:38 தேவன் நம்மிடம் பேசும் முறை
34:03 உங்களுடைய சொந்தப் பகுத்தறிவை நம்பாமல் அவருடைய ஞானத்தை நம்புங்கள்!
48:32 ஆவியானவரால் நடத்தப்படும் முடிவுகளை எடுப்பது எப்படி
58:17 பரிசுத்த ஆவியானவரை பின்பற்றும் பொழுது மன அழுத்தம் இல்லாமல் வாழ்வீர்கள்
01:04:25 தேவனுடைய வழிநடத்துதலை என்னால் உணர முடியவில்லை என்றால் என்ன செய்வது?
01:17:05 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்தின் ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
---
Do you find yourself caught in a situation where you’re unsure of what to do? In a world filled with differing opinions and advice, how do you know which one to follow? Find rest and assurance when you see how God deposits His wisdom in your heart for every situation, whether big or small. Learn how you can perceive His guidance and instruction in your heart instead of depending solely on natural reasoning or logic, and begin to see the breakthroughs and turnarounds you’ve been hoping for.
About this episode
You are watching the sermon, Perceive God’s Wisdom In Your Heart, preached on May 15, 2022 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil