MENU

Fun & Interesting

இந்த உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிருவீங்க! பாழடைந்த கோவிலில் ராஜராஜ சோழனைப் பற்றிய ரகசிய கல்வெட்டு?

Praveen Mohan Tamil 266,604 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - அறிமுகம்
00:57 - ஒரே கல்லாலான விஷ்ணு சிலை
02:38 - விசித்திர உருவமும், விசித்திர தூண்களும்
04:11 - புராண கதைகளை சொல்லும் சிற்பங்கள்
06:52 - இராமாயண கதை சொல்லும் சிற்பம்
08:46 - பழங்காலத்து தமிழ் கல்வெட்டுகள்
10:46 - கோவிலின் உண்மையான பெயர்
14:28 - செங்கலால் கட்டப்பட்ட கோவில்
16:11 - அசத்தலான Top Structure
17:41 - காணாமல் போன மூலவர் சிலை
20:03 - தலையில்லாத சிலை கண்டுபிடிப்பு
23:36 - முடிவுரை

Hey guys, நான் இன்னைக்கு ஒரு பழங்காலத்து ஹிந்து(தமிழ்) கோவில தேடிட்டு இருக்கேன். அந்தக் கோவில் குறைஞ்சது ஆயிரம் வருஷம் பழமையானதா இருக்கலாம். வாங்க, நாம போய் அத பாத்து, அதுல இருந்து நம்மளால என்ன கண்டுபிடிக்க முடியுதுன்னு பாக்கலாம். கொத்தமங்கலம் அப்படின்ற ஊர்ல பாழடைஞ்ச ஒரு கோவில் இருக்குன்னு சில பேர் சொன்னாங்க. இதுல ஒரு beauty என்னனா, இந்த ஊர் google map-லயே இல்ல. மேப்ல இதுக்கு பக்கத்துல இருக்கற காட்டூர் அப்படின்ற ஊர் தான் இருக்கு. So, அந்த கோவில் எங்க இருக்குன்னு கண்டுபிடிக்குறதுக்கு நான் இந்த ஊருக்கு நேர்ல வந்து தேட வேண்டி இருந்துச்சு.

Oh! அங்க பாருங்க, ஒரு பெரிய விஷ்ணு சிலை இருக்கு. அங்க பாருங்க, அங்க தான் அந்த பாழடைஞ்ச கோவில் இருக்கு. இது தான் நாம தேடிட்டு இருந்த பழங்காலத்து கோவில். மொதல்ல நான் என்னோட shoe-அ கழட்டிடுறேன், அதுக்கப்பறம் அங்க என்ன இருக்குன்னு நாம போய் பாக்கலாம். வாங்க, நாம இந்த விஷ்ணு சிலைய பாக்கலாம். Guys, நீங்க இங்க பாத்துட்டு இருக்கறது ரொம்ப பெரிய விஷ்ணு சிலை. இது அஞ்சு அடில இருந்து ஆறு அடி நீளம் வரைக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன். இப்போ கேள்வி என்னனா, உண்மையிலேயே இது விஷ்ணு தானா? இல்ல, வேற ஏதாவது சாமியா இருக்குமா?

நான் எத வச்சு இத விஷ்ணுன்னு சொல்றேன்னா, இங்க பாருங்க நாமம் போட்ருக்காரு. விஷ்ணுக்கு தான் இந்த மாறி நாமம்-லாம் போடுவாங்கன்னு உங்களுக்கே தெரியும். ஒரு வேள இந்த சிலைல இருக்கற நாமம் புதுசா போட்டதுன்னு நீங்க சொல்லலாம். ஆனா நீங்க இங்க மத்த விஷயங்களையும் பாக்கலாம். உதாரணத்துக்கு, இங்க சங்கு இருக்கறத உங்களால பாக்க முடியும். இது விஷ்ணுவோட அடையாளம் தான், அதுல எந்த சந்தேகமும் இல்ல. இந்த மாறி படுத்துட்டு இருக்கறவர நாம சயன விஷ்ணு இல்லனா, பள்ளிகொண்ட பெருமாள்ன்னு சொல்லுவோம். அவரோட ஒரு கைய இந்த மாறி வச்சு தூங்கிட்டு இருக்காரு, அவரு பூணூல் போட்டுருக்காரு, நெறய நகை எல்லாம் கூட போட்டுருக்காரு, அது மட்டுமில்ல, காதுல பெரிய தோடு கூட போட்டுருக்காரு. அவரோட தலைல கிரீடம் கூட இருக்கு, So சந்தேகமே இல்ல இது விஷ்ணு தான்.

Usual-ஆ, விஷ்ணுவோட கால் பக்கத்துல அவரோட wife(மனைவி) லட்சுமி இருப்பாங்க, ஆனா இங்க அவங்கள காணோம். இது ஒரே கல்லால செய்யப்பட்ட சிலை. இந்த இடத்துல இருக்கற depth-அ (மேட) பாருங்க, விஷ்ணுவோட பாதத்த realistic-ஆ காட்டுறதுக்காக தான் இந்த depth-அ(மேட) செதுக்கிருக்காங்க. இது note பண்ண வேண்டிய ஒரு விஷயம். அவரோட முகத்த பாருங்க, சாந்தமா இருக்காருல? அவரு முகத்துல ஒரு மர்மமான smile கூட இருக்கு.

அங்க செங்கல வச்சு கட்டுன ஒரு பெரிய கோபுரம் இருக்கு, ஆனா அதுக்கு முன்னாடி, complete-ஆ granite அ வச்சு கட்டுன இன்னொரு structure இருக்கு பாருங்க. வாங்க, நாம அது கிட்ட போகலாம். இங்க குட்டியா நல்லா கொழு கொழுன்னு(புஸு புஸுன்னு) இருக்கற ஒருத்தர் சங்கு ஊதி என்னய வரவேற்குறாரு. இவரு யாரு? இவரோட hair style கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, ஆனா இந்த கோவில யாருமே கண்டுக்காம விட்டதுனால, இங்க எல்லாமே அரிச்சு போய் இருக்கு. இவரு நல்லா பெரிய தோடு போட்ருக்காரு, அது மட்டுமில்ல, இவரோட தொப்பைல belt மாறி இருக்கற ஒன்ன கூட போட்டுருக்காரு.

Inferior civilizations (அரைகுறை knowledge இருக்கற ஏதோ ஒரு civilizations) இத புதுப்பிக்க முயற்சி பண்ணிருக்காங்கன்னு, இத பாத்த உடனே எனக்கு தெரியுது. Left side-ல இருக்கற cylindrical தூணுக்கு ஒரு rectangular shape-ல இருக்கற block support-ஆ இருக்கறத உங்களால இங்க பாக்க முடியும். அதே மாறி right side-ல இருக்கற தூணுக்கு மேல, ஒரு சின்ன cylindrical block-அ, அதோட height-க்கு ஏத்த மாறி adjust பண்ணி வச்சுருக்காங்க. இது பழங்காலத்து ஸ்தபதிங்க பண்ண ஒரு பெரிய engineering mistake-ன்னு நீங்க நினைக்கலாம், ஆனா நீங்க கவனமா பாத்தீங்கன்னா, மத்த எல்லாம் ஒரு கலர்லயும், right side-ல இருக்கற தூண் வேற ஒரு கலர்லயும் இருக்கறத நீங்க பாக்கலாம்.

சில நூறு வருஷத்துக்கு முன்னாடி தான் இந்த மோசமான renovation-அ பண்ணிருந்துருக்காங்க. அதனால தான் இது பாக்குறதுக்கு கொஞ்சம் விசித்திரமா இருக்கு. ஆனா நல்ல வேள இங்க இருக்கற இந்த சிற்பங்கள் எல்லாம் அப்படியே original-ஆவே இருக்கு. இதெல்லாமே ரொம்ப ரொம்ப valuable-ஆன சிற்பங்கள், அது மட்டுமில்ல, இதெல்லாம் ரொம்ப ரொம்ப interesting-ஆன சிற்பங்கள். இதுல நெறய interesting-ஆன கதை எல்லாம் இருக்குது. ஒவ்வொரு சிற்பமும் பழங்காலத்து books-ல (புராணங்கள்ல) இருக்கற ஒவ்வொரு கதைய சொல்லுது.

இந்த சிற்பத்த காட்டுறேன், பாருங்க. இது ரொம்ப famous-ஆன ஒரு கதை. மனுஷன மாறி இருக்கற ஒரு உருவம், பறவையோட அலக (மூக்க) பிடிச்சுட்டு இருக்கறத நீங்க இங்க பாக்கலாம். Actual-ஆ இது வேற யாரும் இல்ல, இது கிருஷ்ணர் தான். பறவை உருவத்துல வந்த அரக்கனை கிருஷ்ணர் கொன்னுட்டு இருக்காரு. இந்த அரக்கனோட பேரு பகாசுரன், கிருஷ்ணர் அதோட முகத்த ரெண்டா பிளந்துட்டு இருக்காரு.


#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comment