திருவீழிமிழலை
எருவாய் கருவாய் தனிலே உருவாய்,
இதுவே பயிராய் ...... விளைவாகி,
இவர்போய் அவராய், அவர்போய் இவராய்,
இதுவே தொடர்பாய், ...... வெறிபோல
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாய்
உடனே அவமாய் ...... அழியாதே,
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர் கா…..என ஓத...... அருள்தாராய்
.
முருகா என ஓர் தரம் ஓது அடியார்
முடி மேல் இணைதாள் ...... அருள்வோனே!
முனிவோர் அமரோர் முறையோ எனவே,
முது சூர் உரமேல் ...... விடும் வேலா!
திருமால் பிரமா அறியாதவர் சீர்
சிறுவா! திருமால் ...... மருகோனே!
செழுமா மதில்சேர் அழகு ஆர் பொழில் சூழ்
திருவீழியில் வாழ் ...... பெருமாளே